அப்போ புரியல இப்போதான் புரிது! விஜய் தான் பீஸ்ட் தோல்விக்கு காரணமா? வைரலாகும் நெல்சன் வீடியோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு டாக்டர் பட இயக்குனர் நெல்சனை வைத்து பிஸ்ட் படத்தில் நடித்து வந்தார் விஜய். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மோசமான விமர்சனத்தையே பெற்று வருகிறது.
கதை உருபடியான விஷயம் எதுவும் இல்லை என்றும், லாஜிக்கில் கோட்டை விட்டுவிட்டார் நெல்சன் என்று பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஜய்யை சரியாக பயன்படுத்தாமல் விட்டாரே என்று தளபதி ரசிகர்களே நெல்சனை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நெல்சன் சமீபத்தில் அளித்த இயக்குனர்கள் பேட்டியில் ஒரு விஷயத்தை கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாம் நினைத்தபடி ஒரு படத்தினை எடுக்க ஹீரோ ஒத்துக்க மாட்டார்கள்.
நமக்கு ஒரு ஸ்டைலில் படம் பண்ண வேண்டுமென்று இருக்கும் ஆனால் கமர்ஷியல் சினிமாவும் வேறமாதிரி இருப்பதால் இதை ஹீரோ ஒற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
விஜய் தான் கதையை இடையில் மாற்றச் சொல்லியதாக நெல்சன் இதனை மறைமுகமாக கூறியுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆனால் இதனை சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை மனதில் கொண்டு தான் நெல்சன் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நெல்சன் அவர்கள் நமது ஜோசப் அண்ணாவை ஒத்த பற்றி கூறிய போது??
— ♔ ℳsd ???? ? ? (@Star_Vijay1) January 15, 2022
#Valimai️ pic.twitter.com/Oiybjgl6og