ஹிட் சீரியலுக்கு மூடு விழா ஏற்பாடு செய்த விஜய் டிவி... எந்த தொடர் தெரியுமா?
Tamil TV Serials
By Yathrika
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் கெத்து காட்டிவரும் விஜய் டிவி இப்போது சீரியல்கள் மூலமாகவும் கலக்கி வருகிறார்கள்.
இந்த தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் ஆஹா கல்யாணம். மிடில் கிளாஸ் வீட்டுப் பெண்கள் ஒரே வீட்டிற்கு திருமணம் செய்து செல்கிறார்கள்.
அவர்கள் அந்த வீட்டில் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றிய சீரியலாக இந்த தொடர் இருந்தது.
வெற்றிகரமாக சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது தொடரை முடிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்துள்ளது. அந்த புகைப்படம் இதோ,