அஜித்துக்கு தங்கையாக நடிக்க நோ சொன்ன தொகுப்பாளினி.. அதுவும் எதற்காக தெரியுமா?
அஜித்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் கூட்டணிகளில் ஒன்று அஜித் - சிவா கூட்டணி. வீரம் படத்தின் மூலம் இவர்களுடைய கூட்டணி முதல் முறையாக அமைந்தது.
முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என 4 படங்கள் இந்த கூட்டணியிலிருந்து வெளிவந்தது.
இதில், ரசிகர்கள் மத்தியில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் வேதாளம். 2014ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், ராகுல் தேவ், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
எதற்காக தெரியுமா?
இதில், அஜித்தின் தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார். ஆனால், இதில் அஜித்தின் தங்கையாக நடிக்க முதன் முதலில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு தான் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், ஆனால் அப்போது காலில் டிடி-க்கு அறுவை சிகிச்சை நடந்த காரணத்தினால் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.