விஜய்யை அவமானப்படுத்திய விஜய் தொலைக்காட்சி.. வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Vijay Star Vijay Varisu
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

அஜித், விஜய்

தமிழ் சினிமாவில் இரு உச்ச நட்சத்திரங்களாக கமல், ரஜினிக்கு பின் பேசப்பட்டு வருபவர்கள் அஜித், விஜய் இவர்களின் படங்கள் ரிலீஸானால் போது அவர்களின் ரசிகர்கள் விழாப்போல் கொண்டாடுவார்கள்.

அதேபோல் இருவரின் ரசிகர்கள் யார் பெரியவர்கள் யார் நன்றாக நடிக்கிறார்கள் என்று ஒரு பனிப்போரே இணையத்தில் நடைபெற்று வரும். அப்படி நடிகர் விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

இதற்காக விஜய் - அஜித் ரசிகர்களிடையே இணையத்தில் கடும் வாக்குவாதங்களும் சண்டைகளும் நிலவி வருகிறது. அந்தவகையில் விஜய்யை நெட்டின்சன்கள் அணில்ஸ் என்று கிண்டலாக பேசியும் விமர்சித்தும் வருவார்கள்.

அவமானப்படுத்திய விஜய் டிவி

அப்படி பிரபல தொலைக்காட்சியான் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீச்சல் குளத்தில் ஒரு அணில் இருப்பதை கேமரா மூலம் காட்டியுள்ளனர்.

அங்கு கொட்டியிருக்கும் உணவு பொருட்களை சாப்பிடும் அணிலை வைத்து அப்படியே ஸ்டார் விஜய் வெளிப்படையாக கலாய்த்திருப்பது விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியிருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.