தொட்டு பேசி அத்துமீறும் நடிகர்களை அப்படி செய்யணும்.. பிரபல விஜய் டிவி anchor ஆவேசம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இதில் தொகுப்பாளராக பணியாற்றிவர் தான் ஜாக்குலின்.
இதையடுத்து இவருக்கு தேன்மொழி என்ற சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. மேலும் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த "கோலமாவு கோகிலா" படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருப்பார். இதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது.

ஜாக்குலின் ஆவேசம்
இந்நிலையில் பேட்டி அளித்த ஜாக்குலின் தொகுப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், " நான் தொகுப்பாளராக இருக்கும் போது சிலர் என் மீது கை போட்டு அத்துமீறி பேசுவார்கள். அப்போது அவர்களை பளார் என்று அறைவிடனும் போல இருக்கும். நிகழ்ச்சியில் விருந்தினராக வரும் சிலர் தான் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
