ஏழே மாதத்தில் பிரபல சீரியலை இழுத்து மூடும் விஜய் டிவி!! விரைவில் கிளைமேக்ஸ்...
விஜய் டிவி சீரியல்கள்
விஜய் தொலைக்காட்சியில் காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல்கள் தொடர்ச்சியாக ஒளிப்பரப்பட்டு வருகிறது. அதில் ஆண்டுதோறும் பல்வேறு புதுப்புது சீரியல்கள் தொடங்கப்படாலும் ஒருசில சீரியல்கள் மட்டும் மக்கள் மனதை கவரும். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியொல் ஏராளமான புது சீரியல்கள் தொடங்கப்பட்டனர்.

அதில் ஒன்று தான் அய்யனார் துணை. நம்பர் 1 இடத்தில் இருக்கும் அய்யனார் துணை சீரியல் 300 எபிசோட்டுகளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. அதேபோல் கடந்த ஆண்டு தொடங்கபப்ட்டு ஒரு ஆண்டு கூட நிறைவு பெறாத ஒரு சீரியல் அதற்குள் முடிவுக்கு வரவுள்ளதாம். அந்த சீரியல் தான் மகளே என் மருமகளே.

மகளே என் மருமகளே
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த சீரியல் மகுவா ஓ மகுவா என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக்காம். நாராயணமூர்த்தி என்பவர் இயக்கி வந்த நிலையில் இயக்குநர் மாரடைப்பால் காலமானார். அதன்பின் தங்கமகள் சீரியல் இயக்குநர் ஹரிஷ் ஆதித்யா இயக்கினார். 3 மணியில் இருந்து 6 மணிக்கு மாற்றப்பட்ட இந்த சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் பெரிய அடியை வாங்கி வந்தது.

இதன் காரணமாக சீரியலை முடிவுக்கு லொண்டு வரவுள்ளார்களாம். வெறும் 1.5 டிஆர்பி ரேட்டிங் மட்டுமே பெற்று வருவதால் அடுத்த மாத இறுதிக்குள் கிளைமேக்ஸ் காட்சி ஒளிப்பரப்பாகி முடித்து வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். மகளே என் மருமகளே சீரியலின் கதை போரடித்து விட்டதால் ரசிகர்களும் சீக்கிரம் முடியுங்கள் என்ற கருத்துக்களையும் கூறி வருகிறார்கள். விரைவில் வேறொரு சீரியலின் பிரமோ வரும் என்று கூறப்படுகிறது.