விஜய் டிவியின் ஹிட் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது... ஜோடி போட்டோ
Tamil Cinema
Tamil TV Serials
By Yathrika
சீரியல் நடிகை
தமிழ் சின்னத்திரையில் நடிகைகள் நடிக்க தொடங்கிய வேகத்தில் திருமணம் செய்து செட்டில் ஆகிறார்கள். அப்படி இப்போது விஜய் டிவி சீரியல் நடிகையின் திருமண புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த செல்லம்மா சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் தான் ஸ்ரேயா. அந்த தொடர் முடிவுக்கு வந்த கையோடு புதிய தொடரிலும் கமிட்டாகிவிட்டார். மகளே என் மருமகளே என்ற புதிய சீரியலிலும் வில்லியாக தான் நடித்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ரோஹித் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது இவருக்கு கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது. ஸ்ரேயா திருமணத்தில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதோ புதிய ஜோடியின் போட்டோ,

