வாய்ப்புக்காக இப்படியொரு கண்டிசன்!! பிரபல கட்சிக்கு தாவும் விஜய்யின் ரீல் அம்மா நடிகை..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஜெயசுதா. இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் நடிகை ஜெயசுதா.
சினிமாவைத்தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் ஜெயசுதா கடந்த 2009ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். செகண்ட்ராபாத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயசுதா எம் எல் ஏ ஆனார்.
அதன்பின் 5 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜெயசுதா 2016ல் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார். பின் 3 ஆண்டுகள் மட்டுமே அந்த கட்சியில் நீடித்த ஜெயசுதா, 2019ல் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.
இந்நிலையில் அந்த கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஜெயசுதா, விரைவில் அமித்ஷா முன்னிலையில் பாஜக கட்சியில் இணையவிருக்கிறாராம்.
அதற்காக ஆந்திர பாஜக மாநில தலைவர் ஜி கிஷன் ரெட்டியை சமீபத்தில் சந்தித்து பேசியிருக்கிறார். அந்த கட்சியில் சேர்வதற்கு முன் எனக்கு செகண்ட்ராபாத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் தான் கட்சியில் இணைவேன் என்ற நிபந்தனையும் வைத்திருக்கிறார்.
இதற்கு பாஜக கட்சி சார்பில் சம்மதமும் தெரிவித்த நிலையில்10 நாட்களில் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணையவிருக்கிறார் ஜெயசுதா.