அவருடன் எடுத்த 5000 போட்டோஸ் இருக்கு!! வெளிப்படையாக பேசிய தமன்னாவின் காதலர் விஜய் வர்மா..

Tamannaah Indian Actress Relationship Actress
By Edward Aug 29, 2024 02:30 PM GMT
Report

நடிகை தமன்னா

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கிளாமர் குயினாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை தமன்னா. முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை ரகசியமாக காதலித்து வந்தார்.

சமீபத்தில் இருவரும் காதலிப்பதாக உறுதிப்படுத்தியும் ஜோடியாக போட்டோஷூட் எடுத்தும் பேட்டியளித்தும் வந்தனர். தன் காதலர் விஜய் வர்மா பற்றி நடிகை தமன்னா பல விஷயங்கள் கூறி வந்தார். தற்போது, தன் வருங்கால மனைவி தமன்னா குறித்து விஜய் வர்மா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அவருடன் எடுத்த 5000 போட்டோஸ் இருக்கு!! வெளிப்படையாக பேசிய தமன்னாவின் காதலர் விஜய் வர்மா.. | Vijay Varma Reveals Relationship With Tamannaah

காதலர் விஜய் வர்மா

நானும் தமன்னாவும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் பல என்னிடம் இருக்கிறது. அவை மொத்தமாக 5 ஆயிரம் புகைப்படங்கள் இருக்கும், ஆனால் இவை அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை நாங்கள் விரும்பவில்லை.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்கிறோம். அதனால் இவை அனைத்தையும் எங்கள் இதயத்தில் நாங்கள் அன்பாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் விஜய் வர்மா.