GOAT படத்தில் தரமான சம்பவம் செய்த வெங்கட் பிரபு!! கொண்டாடும் ரசிகர்கள்..
கோட்
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வரும் நிலையில் படத்தினை பார்க்க விஜய் குடும்பத்தினருடம் சென்றிருக்கிறாராம்.
சென்னை அடையாறில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு தன் மனைவி, மகன், மகள், பெற்றோர்களுடன் விஜய் கோட் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படத்தில் விஜய் சிறப்பாக நடித்து மாஸ் காட்டி இருக்கிறார் என்றும் AI தொழில்நுட்பத்தில் செய்த சில வேலைகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் பலரது விமர்சனமாக இருக்கிறது.
மேலும் பல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றதும் சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. அதிலும் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் கூறும் டயலாக் மாஸாக இருந்ததாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.