தமன்னாவுடன் காதல் முறிவு.. தனது புதிய காதலியை அறிமுகப்படுத்திய விஜய் வர்மா
Tamannaah
By Kathick
நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரிடமும் எப்போது திருமணம் என்கிற கேள்விதான் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திடீரென இருவரும் காதல் பிரேக் அப் செய்துவிட்டு பிரிந்துவிட்டனர். இதன்பின், பிரபல நடிகை பாத்திமா சனா சாய்க் என்பவரை விஜய் வர்மா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது வெறும் வதந்தி தான்.

ஆனால், நேற்று காதலர் தினத்தன்று தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார் விஜய் வர்மா. தன் புது காதலி கையை பிடித்து இருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.
ஆனால் அதை க்ளிக் செய்து பார்த்தபோது தான் அது prank என்பது தெரியவந்தது. ட்ரோல் செய்யும் வகையில் இருக்கும் ஒரு இன்ஸ்டா கணக்கின் லிங்க்கை அதில் அவர் இணைத்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.
