அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா

Ajith Kumar Vijay
By Karthick Raja Aug 13, 2026 04:50 AM GMT
Report

அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

மங்காத்தா படப்பிடிப்பு மற்றும் விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரே சமயத்தில் நடைபெற்றது. அப்போது அஜித் - விஜய் இருவரும் நேரில் சந்தித்து கொண்டனர். விஜய்க்கு அஜித் பிரியாணி சமைத்து போட, அஜித்துக்கு வாட்ச் ஒன்றை விஜய் பரிசளித்தார். அந்த புகைப்படங்கள், வீடியோ கூட இணையத்தில் படுவைரலானது.

அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா | Vijay Wanted To Work In Ajith Movie

இந்நிலையில் மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விஜய் வெங்கட் பிரபு டீமிற்கு ஒரு பார்ட்டி வைத்துள்ளார்.

அப்போது பேசும்போது, நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், அர்ஜுன் சார் கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டுருக்கலாமே, நான் நடித்திருப்பேனே நம்ம அஜித் சார் 50வது படத்திற்காக என கூறினாராம். பின் வெங்கட் பிரபு உண்மையாகவா அண்ணா என கேட்க, உண்மையாக தான் நானே நடித்திருப்பேனே என விஜய் சொன்னாராம்.

அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா | Vijay Wanted To Work In Ajith Movie

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.