இரயிலில் பெண்களிடம் சில்மிஷம்!! நிஜவாழ்க்கையில் 40 பேருக்கிட்ட அடிவாங்கி அசிங்கப்பட்ட விஜய்..

Vijay Viral Video
By Dhiviyarajan Mar 07, 2023 12:33 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக அனைத்து தரப்பு மக்களை கவர்ந்தவர் தான் தளபதி விஜய்.

தற்போது இரண்டாம் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். 

இரயிலில் பெண்களிடம் சில்மிஷம்!! நிஜவாழ்க்கையில் 40 பேருக்கிட்ட அடிவாங்கி அசிங்கப்பட்ட விஜய்.. | Vijay Was Beaten By 40 Members In Train

வைரலாகும் வீடியோ

பல வருடங்களுக்கு முன்பு விஜய் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. அதில் அவர், "நான் காலேஜ் படிக்கும் போது வெளியே சுற்றுலா சென்று இருந்தோம். அப்போது ட்ரைனில் இருந்த இரண்டு பேர், என்னுடன் சேர்ந்து படிக்கும் தோழிகளுடன் கலாட்டா செய்து கொண்டு இருந்தனர்".

"அந்த நேரத்தில் நாங்கள் 10 பேர் சென்று அந்த இரண்டு பேரையும் அடித்து விட்டோம். கொஞ்சம் நேரம் கழித்து அந்த இரண்டு பேர் சென்று 40 பேரை அழைத்து வந்தனர். கடைசியில் அவர்கள் எங்களை அடித்து விட்டனர். என்னுடைய நண்பர்கள் சில பேர் கட்டுப்போட்டு கொண்டு மெட்ராஸ் வந்தனர்" என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.