சங்கீதா விவாகரத்து மனு!! விஜய்க்கும் 27-க்கும் என்ன சம்மந்தம்!! பிரபல நடிகை சப்போர்
சங்கீதா விவாகரத்து
நடிகர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து மனுவை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தற்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. என் கணவர் விஜய், ஒரு நடிகையுடன் 2021ல் முதல் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார்.

இதனை நான் கண்டுபிடித்து, கண்டித்தும் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார். அவருடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருகிறார். அது எனக்கு அவமானத்தை தருகிறது என்று பல காரணங்களை கூறி மனு தாக்கல் செய்துள்ளார் சங்கீதா.
விஜய்க்கும் 27 ஆம் தேதிக்கும்
இதற்கு விஜய் பலரும் ஆதரவளித்து வந்த நிலையில், விஜய்க்கும் 27 ஆம் தேதிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதையும் விஜய்க்கு ஆதரவையும் கூறி நடிகை சசிலியா வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதில் சசிலியா, நல்லது பண்ணனும் வரும் ஒரு மனுஷன என்னென்ன பிரச்சனையில மாட்டிவிடுகிறீங்கல்ல நீங்க. செப்டம்பர் 27 கரூர் சம்பவம் நடந்தது , அக்டோபர் 27 விசாரணை நடந்தது, நவம்பர் 27 மாண்புமிகு செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, டிசம்பர் 27 ஜனநாயகன் ஆடியோ லான்ச், ஜனவரி 27 ஜனநாயகன் தணிக்கை வழக்கு ஹியரிங், இப்போ பிப்ரவரி 27 விவாகரத்து பிரச்சனை.

ஒரு மனுஷனை அழிக்க எந்த சூழலையும் உருவாக்குவீங்கள்ல. சங்கீதா அண்ணி உண்மையில் அதை பண்ணாங்களா என்று தெரியல. அப்படி அவர் பண்ணி இருந்தால் அண்ணி அதை நீங்கள் பண்ணி இருக்கக்கூடாது. ஆயிரம் துரோகத்தை அண்ணன் பார்த்துவிட்டார். ஆனா, நீங்க கூட இத்தனை வருஷமா இருக்கீங்க, தேர்தல் டைம் பார்த்து, அவர் பற்றி இப்படி பேசுவது தவறு, அவருடன் நாங்க இருக்கோம் என்று சப்போர்ட் செய்து பேசியிருக்கிறார் நடிகை சசிலியா.