அந்த இடத்திற்கு போய்ட்டு வந்த விஜய்!! வீட்டுக்கு வந்ததும் கடுமையாக திட்டிய மனைவி சங்கீதா..
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் பற்றிய தனிப்பட்ட விசயங்கள் குறித்த வதந்தி செய்திகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருந்து அவருக்கு பல விசயங்களை செய்து வருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சில காரணங்களால் மனைவி சங்கீதாவையும் விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.
வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் முதல் இன்று வரை மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார் விஜய் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் நடிகர் சாந்தனு ஒரு பேட்டியொன்றில் என்னுடைய திருமணத்திற்கு விஜய் வந்திருந்தார்கள். விஜய் அண்ணா தான் தாலி எடுத்துக்கொடுத்தார்.
ஆனால் விஜய் அண்ணா திருமணம் முடிந்து வீட்டுக்கு சென்றதும் சங்கீதா கடுமையாக திட்டினாராம். பெரியவர்கள் தான் அந்த விசயங்களை செய்ய வேண்டும் ஏன் நீங்கள் செய்தீர்கள் என்று விஜய்யை திட்டித்தீர்த்துள்ளாராம்.