விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா!! அடேங்கப்பா
விஜய்
நடிகர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் களமிறங்கிவிட்டார். சமீபத்தில் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். இந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. பல லட்சம் தொண்டர்கள் இதில் திரண்டனர்.
சங்கீதா விஜய்
விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதாக தொடர்ந்து பல விதமான வதந்திகள் பரவி வந்தன. ஆனால், அவை யாவும் உண்மையில்லை என பின் தெரியவந்தது.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட லண்டன் தொழிலதிபரின் மகளான சங்கீதா, விஜய்யின் தீவிர ரசிகை ஆவார். இவர்கள் இருவரின் நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. விஜய் - சங்கீதா தம்பதிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகன் சஞ்சய் தனது தாத்தா மற்றும் தந்தையை போலவே சினிமாவில் களமிறங்கியுள்ளார். மகள் திவ்யா சமீபத்தில்தான் தனது படிப்பை முடித்தார்.
இந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சங்கீதா விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.