நிச்சயமாகி 3 வருஷம்! இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கும் விஜயகாந்த் மகன்.. மருமகள் புகைப்படம்

Vijayakanth
By Edward Jul 31, 2022 08:15 AM GMT
Report

80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்று தமிழக ரசிகர்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராகவும், தேமுதிக கட்சியின் தலைவராகவும் திகழ்ந்து வந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டு வந்த விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஷாக்காகினார்கள். தற்போது மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்கவுள்ளதாகவும் அபபடத்தின் இயக்குனர் விஜய் மில்டன் உறுதி செய்தார்.

இந்நிலையில் விஜயகாந்தின் இரண்டாவது மகன் விஜய பிரபாகரன் சில ஆண்டுகளுக்கு முன் கீர்த்தனா என்பவரை நிச்சயம் செய்திருந்தார். ஆனால் நிச்சயமாகி 3 ஆண்டுகள் கடந்து இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது நிச்சயதார்த்ததில் எடுக்கப்பட்ட விஜயகாந்தின் வருங்கால மருமகள் புகைப்படம் வைரலாகி வருகிறது.

GalleryGallery