தூக்கி அடிச்சுருவேன்னு சொன்ன மனுஷனா இது.. 69 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இருவரையும் ஓரங்கட்டி, முதலிடத்தில் வசூல் மன்னனாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது.இவர் அரசியலுக்கு சென்ற பிறகு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார்.
சினிமா மற்றும் அரசியல் என இரண்டையும் சரிசமமாக கையாண்டு வந்தார் விஜயகாந்த். ஆனால், தீடீரென உடல்நல குறைவு காரணமாக இரண்டில் இருந்தும், விஜயகாந்தால் கவனம் செலுத்து முடியாமல்போனது. ஒரு கட்டத்திற்கு மேல் படங்களிலும் நடிக்கமுடியாமல் போய்விட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் சிகிச்சையால் தற்போது உடல்நலம் குணமாகி, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அவ்வப்போது தனது கட்சியின் பக்கம் சென்று வரும் விஜயகாந்த், மீண்டும் விஜய் அண்டோனி நடிப்பில் உருவாகி வரும் மழைப்பிடிக்காத மனிதன் படத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், தங்களது வருத்தமான கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகிறார்கள்.
