எம்.பி பதவி முக்கியம் இல்லை, அது மட்டும் போதும்.. கண்ணீரில் விஜயகாந்த் மகன்

Vijayakanth Tamil Cinema Tamil Actors
By Bhavya Aug 10, 2025 02:30 AM GMT
Report

 விஜயகாந்த்

ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் 'கேப்டன் பிரபாகரன்'. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு 'கேப்டன்' என்ற அடைமொழி கிடைத்தது.

கேப்டன் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அரசியலிலும், இளைய மகன் சினிமாவிலும் களமிறங்கியுள்ளனர்.

எம்.பி பதவி முக்கியம் இல்லை, அது மட்டும் போதும்.. கண்ணீரில் விஜயகாந்த் மகன் | Vijayakanth Son Emotional Speech About Father

பரபரப்பு பேச்சு 

தற்போது, 'கேப்டன் பிரபாகரன்' படம் வரும் 22-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் விழாவில் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. கேப்டன் மகன் விஜய பிரபாகரன் என்ற பெயர் தான் எனக்கு முக்கியம். எனக்கு வேற பெருமை எதுவும் வேண்டாம், கடைசி வரை விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் போதும்" என்று தெரிவித்துள்ளார்.  

எம்.பி பதவி முக்கியம் இல்லை, அது மட்டும் போதும்.. கண்ணீரில் விஜயகாந்த் மகன் | Vijayakanth Son Emotional Speech About Father