நிச்சயத்தோடு திருமணம் நிற்க என்ன காரணம்!! வெளியானது விஜயகாந்த் மகனின் கல்யாண தகவல்..

Vijayakanth Gossip Today Premalatha Vijayakanth
By Edward Aug 21, 2024 02:30 PM GMT
Report

விஜயகாந்த் மகன்

80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கேப்டன் என்று மக்கள் அழைக்கப்பட்டு வந்தவர்தான் நடிகர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேப்டனின் மரணம் அனைவரையும் பெரியளவில் பாதித்தது. தற்போது அவரது தேமுதிக கட்சியை பிரேமலதாவும் அவரது விஜய பிரபாகரனும் கவனித்து வருகிறார்கள்.

நிச்சயத்தோடு திருமணம் நிற்க என்ன காரணம்!! வெளியானது விஜயகாந்த் மகனின் கல்யாண தகவல்.. | Vijayakanth Son Vijaya Prabhakaran Marriage Update

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ல் பிரபல தொழிலதிபரின் மகள் கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. ஆனால் திருமணம் குறித்த தகவல் 5 வருடங்களாக இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

நிச்சயதார்த்ததோடு நிற்க காரணம் விஜயகாந்தின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி வந்ததால், திருமணத்தை அவருடைய குடும்பத்தினர் தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நிச்சயத்தோடு திருமணம் நிற்க என்ன காரணம்!! வெளியானது விஜயகாந்த் மகனின் கல்யாண தகவல்.. | Vijayakanth Son Vijaya Prabhakaran Marriage Update

விஜயகாந்த் இறந்து இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை என்பதால் ஒரு வருடம் கழித்து விஜயகாந்த் மகன் விஜய குமாரின் திருமணம் எப்போது என்ற தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நிச்சயம் செய்த அதே பெண்ணை விஜய பிரபாகரன் கரம் பிடிப்பாரா? இல்லை வேறொரு பெண்ணை திருமணம் செய்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்ப்ப வேண்டும்.