இளம் நடிகருடன் குத்து பாடலுக்கு நடனமாடும் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி.. வைரல் வீடியோ
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் தான் ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
பின் தமிழில் வெளிவந்த காதல் வைரஸ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 2002ஆம் ஆண்டு கதாநாயகியாக நடிக்க துவங்கிய இவர், 2009ஆம் ஆண்டு வரை தான் நடித்து வந்தார். அதன்பின் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி விட்டார்.
சமீபத்தில் விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் நடுவராக வந்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். இவருடைய சில க்யூட் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பிரபல இளம் நடிகருமான ரியோவுடன் ஸ்ரீதேவி செய்யும் நகைச்சுவைகள் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் ரியோவுடன் அப்படி போடு பாடலுக்கு ஸ்ரீதேவி விஜயகுமார் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Actor @rio_raj & Sridevi Vijayakumar Grooves For The Appudi podu Song ????? @actorvijaypic.twitter.com/6gNs6SFF4b
— TD....❥ (@MiniiGirl__) May 13, 2024