செய்யாத தவறுக்கு கன்னத்தில் அடித்தார் பாரதிராஜா.. அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை விஜயசாந்தி..
விஜயசாந்தி
70களில் சினிமாவில் நடிக்க வந்தாலும் 80, 90களில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக தமிழ் சினிமாவில் திகழ்ந்தவர் தான் நடிகை விஜயசாந்தி.
ரஜினிகாந்துடன் மன்னன் படத்தில் ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விஜயசாந்தி, வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தில் நடித்து ஆக்ஷன் நாயகியாக நடித்து வந்து மிரட்டினார்.
ஒரே வருடத்தில் 17 படங்களில் நடித்த விஜயசாந்தி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இயக்குநர் பாரதிராஜா பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கன்னத்தில் அடித்த பாரதிராஜா
கல்லுக்குள் ஈரம் படத்தின் பாரதிராஜா இயக்கத்தில் நடிகையை தேடியபோது, அவரது கார் வழியில் பஞ்சரானது. பக்கத்தில் இருந்த ஸ்டுடியோவில் சென்று அவர் காத்திருந்ததாகவும் அப்போது தன் புகைப்படத்தை பார்த்து தன்னை செலக்ட் செய்தார் பாரதிராஜா.
படத்தில் ஒரு
காட்சியில் தான் செய்யாத தவறுக்காக
காட்சி சரியாகவில்லை என்று கூறி அவர்
தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும்,
இதனால் கோபத்தில் தான் ஷூட்டிங்கில்
இருந்து கிளம்பியபோது சாக்லெட்
வாங்கித்தருவதாக கூறி உதவியாளர்கள்
சமாதானம் செய்ததாகவும் நடிகை
விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.