அனிருத்தின் திருமணம்? அவரது தந்தை என்ன கூறியுள்ளார் பாருங்க
தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக தற்போது வலம் வருகிறார் அனிருத். இவர் இசையில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வெளியாகிறது.
இசையில் முழுமூச்சாக இருக்கும் அனிருத் தனது திருமணம் குறித்து எப்போது அறிவிப்பார் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஒரு பேட்டியில் அனிருத்தின் அப்பாவும் பிரபல நடிகருமான ரவி ராகவேந்திரா தனது மகன் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "இன்று எந்த பையன் அப்பா, அம்மாவிடம் வந்து நீங்கள் பெண் பாருங்கள் என்று சொல்கிறான் சிலர் சொல்லலாம், பலர் பெற்றோர்களிடம் கேட்பதில்லை.
திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறார்களே தவிர, நான் செய்துகொள்ளவா, நீங்கள் பெண் பார்க்கிறீர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. பார்ப்போம் அனிருத் என்போது சொல்கிறார் என்பதை" என கூறியுள்ளார். அனிருத் திருமணம் குறித்து அவருடைய தந்தை பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
