சூப்பர் ஸ்டார் முன்பு, தரையில் அமர்ந்த தமிழ் சினிமாவின் கருப்பு சிங்கம்.. இவருக்கே இந்த நிலமையா
தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் ரஜினி - கமல் இருவரையும் ஓவர் டேக் செய்து நம்பர் 1 இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கு, கேப்டன், கருப்பு எம்ஜிஆர். கருப்பு சிங்கம் என்று பல பெயர்களை ரசிகர்களை வைத்துள்ளனர். விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜன் தானாம். விஜயகாந்த், திரையுலகில் அறிமுகமான நேரத்தில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த்.
அவரை போல் விஜயகாந்தும் பாப்புலர் ஆவவேண்டும் என்று நினைத்த பிரபல இயக்குனர் எம். ஏ. ராஜா, விஜயராஜன் என்ற பெயரை மாற்றி, என்று விஜயகாந்த் என்று வைத்துள்ளார். இதன்பின் பல படங்களில் நடிக்க துவங்கினார் விஜயகாந்த். இதனால், ரஜினிகாந்தின் மீது அளவுகடந்த அன்பை விஜயகாந்த் கொண்டுள்ளார்.
ஒரு முறை நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், விழா ஒன்றில் கலந்துகொள்ள ரஜினியை நேரில் சென்று அழைத்தபோது, ரஜினியின் முன்பு தரையில் அமர்ந்துள்ளார் விஜயகாந்த். இதனை பார்த்து பதறிப்போன ரஜினி, 'என்ன விஜி இப்படி பண்ற' என்று கேட்டுள்ளார். அந்த அளவிற்கு ரஜினியின் மீது மரியாதையை விஜயகாந்த் கொண்டுள்ளார் என்பதை இந்த ஒரு நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.