இது நம்ம லிஸ்ட்ல இல்லையே!! பாலியல் புகாரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராகவும் கோடியில் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல விசயங்களை செய்து அரசியல் பிரவேசத்தை நோக்கி காய் நகர்த்தி வருகிறார். மாவட்ட வாரியாக முதல் மூன்று இடத்தினை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் சார்ப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்கிறார். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த நிர்வாகியான காளிஸ்வரன் மற்றும் சுபாஷ் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் பல்லடம் அருகே வடுகபாளையத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகாரளிக்கப்பட்ட நிலையில் இருவரையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு தினங்களில் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.