முகெஷ் அம்பானிக்கே டஃப் கொடுத்த கோடீஸ்வரர்..இப்போ வாடகை குடியிருப்பு!! யார் அது தெரியுமா?
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 17வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி பல லட்சம் கோடிக்கு அதிபதியாக இருந்து வருகிறார். ஆனால் அவரைவிட கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக இருந்து டாப் இடத்தில் இருந்தார் தற்போது வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறாராம். அது வேறு யாருமில்லை, ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரான விஜய் பட் சிங்கானியா தான்.
விஜய் பட் சிங்கானியா
இந்தியாவின் பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவர் மட்டுமில்லாமல் செல்வாக்கு மிக்க தொழிலதிபதியாகவும் திகழ்ந்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்த ஒரு காலத்தில் அவர் கட்டுபடுத்திய சொத்துக்கள் எல்லாம் அவருக்கு சொந்தமில்லாமல் போனது. 1980 முதல் 2000 வரை ரேமண்ட் குழுமத்தை வழிநடத்திய விஜய் பட், நிறுவனம் ஜவுளி மற்றும் பேஷன் துறையில் உலகளாவிய சக்தியாக மாறியது. ஆனால் அவரது பயணத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை, குறிப்பாக அவரது சொந்த குடும்பத்தில் இருந்தே நெருக்கடி கிளம்பியது. சிங்கானியாவின் மாமா மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் இருந்தே மோதல்களை எதிர்கொண்டார்.
அவரது உறவினர்கள் ஒவ்வொருவரும் ரேமண்ட் குழுமத்தை கைப்பற்றத் துடித்துள்ளனர். அவர் தனது இரு மகன்களான மதுபதி மற்றும் கௌதம் சிங்கானியா ஆகியோருக்கு, தனது நிறுவனத்தைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தபோது மிகவும் கடுமையான தகராறுகளை சந்தித்தார். மதுபதி சிங்கப்பூருக்குச் சென்றதை அடுத்து, விஜய்பட் 2015 இல் ரேமண்டில் 37 சதவிகித பங்குகளை தனது இளைய மகன் கௌதமிடம் ஒப்படைத்தார்.
ஆனால் சொத்துக்கள் கைக்கு வந்ததும் அவர்களது உறவு விரைவில் மோசமடைந்து, விஜய்பட் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்டதுடன் பொருளாதார ரீதியாக போராடினார். 2006 ல் பத்ம பூஷண் விருது பெற்றார். 1994 ல் இந்திய விமானப் படையால் கெளரவ ஏர் கமடோராகக் கௌரவிக்கப்பட்டார். ரேமண்டின் நிகர மதிப்பு 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ 4,617 கோடி என்றே தெரிய வந்துள்ளது. ஆண்டு வருவாய் ரூ 1638 கோடி என கூறப்படுகிறது. இருப்பினும், விஜய்பட் சிங்கானியா தற்போதும் மும்பையில் ஒரு வாடகை குடியிருப்பிலேயே வசித்து வருகிறார்.