விஜய்யிடம் விவாகரத்து கேட்கும் மனைவி சங்கீதா!! அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சங்கீதா - விஜய்
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா, நடிகர் விஜய் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, தீவிர ரசிகையாகவும் இருந்துள்ளார். பின் அவருடைய வாழ்க்கை துணையாக மாறி 1999ல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார் சங்கீதா. 2 குழந்தைகளுக்கு தாயான சங்கீதா, தன் கணவர் நடித்து வெளியாகும் பட நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்து கொண்டு வந்தார். கடைசியாக மாஸ்டர் பட ஆடியோ லான்சில் கலந்து கொண்டப்பின் விஜய்யுடன் இணைந்து வெளியில் செல்வதை தவிர்த்து வந்தார் சங்கீதா.

இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
என் கணவர் விஜய், ஒரு நடிகையுடன் 2021ல் முதல் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். இதனை நான் கண்டுபிடித்து, கண்டித்தும் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார். அவருடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருகிறார். அடு எனக்கு அவமானத்தை தருகிறது.

2021 முதல் தன்னுடைய திருமணம், சமூக மற்றும் தொழில் வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக விலக்கி வைத்துவிட்டார் ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம். தற்போது 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என் குழந்தைகளையும் விஜய் கவனித்து கொள்ளவில்லை. அவரின் திருமணத்தை மீறிய உறவால் என் குழந்தைகளும் நண்பர்கள்ம் உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர் என்று கூறி மனுதாக்கல் செய்திருக்கிறார் சங்கீதா.

சொத்து மதிப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வழக்கறிஞர் இல்லாமல் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதா விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 400 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.