19வது நாளில் இத்தனை கோடி வசூலித்தும் ரஜினியை நெருங்க முடியாத கமல் ஹாசன்? விக்ரம் பாக்ஸ் ஆபிஸ்

Kamal Haasan Rajinikanth Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Jun 22, 2022 08:56 AM GMT
Edward

Edward

Report

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் விக்ரம். பிரம்மாண்ட முறையில் மல்டிவெர்ஷன் படமாக ஜூன் 3 ஆம் தேதி உலகளவில் வெளியானது.

விஜய்சேதுபதி, பகத் பாசில், சிறப்பு கதாபாத்திரத்தில் சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகிய முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வரவேற்பும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் பெற்றது.

தமிழ் திரையுலகில் வெளியான விஜய், அஜித் படங்களின் வசூலை துவம்சம் செய்து வசூல் மன்னனாக முதல் முறையாக கமல் ஹாசன் திகழ்ந்துள்ளார். தற்போது வரை 19 நாட்களில், உலகளவில் விக்ரம் படம் 380 கோடி வசூலை பெற்று 5வது இடத்தில் உள்ளது.

ஆனால், தமிழ் படங்களில் கமல்ஹாசனின் விக்ரம் படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் வசூலை நெருங்க முடியாமல் இருக்கிறது. 2.0 மொத்தம் ரூ. 655.81 கோடியை பெற்று டாப் இடத்தில் இருக்கிறது.