ரஜினி, அஜித் விஜய்லாம் ஓரமா போங்க? இனிமேல் ஆண்டவரின் ஆட்டம் ஆரம்பம்! எத்தனை கோடி தெரியுமா?

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Jun 13, 2022 10:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய படம் விக்ரம். கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ரிலீசான முதல் நாளிலே வசூல் சாதனையை முறியடித்து வருகிறது. 

அப்படி வசூல் சாதனையில் அதிக கோடியில் வசூலித்த படங்களான ரஜினியின் அண்ணாத்த, கபாலி, தர்பார் படங்களையும் விஜய்யின் மெர்சல், பீஸ்ட் படங்களின் வசூலையும், அஜித்தி வலிமை படத்தின் வசூலையும் பின்னுக்குத்தள்ளி 300 கோடி வசூல் சாதனையை பெற்றுள்ளது.

இதுவரை பல ஆண்டுகளாக விஜய், ரஜினி, அஜித் போட்டிப்போட்டு வந்த நிலையில் தற்போது கமல் ஹாசனின் விக்ரம் படம் முறியடித்துள்ளது.

ஆனால் விஜய்யின் பிகில் படம் 300 கோடி வசூலித்தை இன்னும் கமல் முறியடிக்கவில்லை. 10 நாட்களில் கமல் 300 கோடியை தொட்டிருப்பது இதுவே முதல்முறையாம்.