விக்ரம் படம் ஹிட் தான்.. ஆனாலும் கமலுக்கு ஒரு வருத்தம்

Kamal Haasan Vikram Movie
By Parthiban.A Jun 08, 2022 10:15 AM GMT
Report

நடிகர் கமலின் விக்ரம் படம் தற்போது தியேட்டர்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. 100 கோடி, 200 கோடி என படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவது ஒரு பக்கம் இருந்தாலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து இருக்கிறது.

கமல்ஹாசனுக்கு இந்த வெற்றி ஊக்கம் அளித்து இருக்கிறது. இதே வேகத்தில் இந்தியன் 2 படத்தை விரைவில் மீண்டும் தொடங்க இருக்கிறார். அது மட்டுமின்றி பாதியில் நிற்கும் சபாஷ் நாயுடு படத்தையும் அவர் தூசுதட்ட இருப்பதாக தெரிகிறது.

கமல் இப்படி மீண்டும் சினிமாவில் பிசி ஆகிறார். விக்ரம் வெற்றி பெற்றாலும் கமலுக்கு ஒரே ஒரு வருத்தம் தான். இப்படி தன் விக்ரம் படத்தை பார்த்து ஹிட் ஆக்கிய ரசிகர்கள் தேர்தல் நேரத்தில் ஓட்டு போடவில்லை என்பது தான் கமலுக்கு இருக்கும் வருத்தம்.

அதை மீமாகவே பதிவிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கின்றனர். 


 

Gallery