17 வயசான சியான் விக்ரமின் ரீல் மகள் சாராவா இது.. இப்படி வளர்ந்துட்டாங்களே

Vikram Indian Actress
By Edward Aug 12, 2022 10:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குட்டி நட்சத்திரங்கள் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி நடிகர் சியான் விக்ரம், அனுஷ்கா செட்டி, அமலா பால், சந்தானம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் நடித்து அசத்தியவர் சாரா அர்ஜுன்.

வட இந்திய குட்டி நட்சத்திரமாக சினிமா பற்றி தெரிந்த பெற்றோர்களால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் அப்படத்தின் இயக்குனரின் ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைத்தார்.

அதன்பின் இந்தி, மலையாளம் படங்களில் நடித்து வந்த சாரா அர்ஜுன் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் குட்டி குழந்தையாக இருந்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். சமீபத்தில் எடுத்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery