அது என்ன கள்ளக்காதலா மறைத்து செய்ய!! ஜெயிலர் 2 கேள்விக்கு சந்தானம் கொடுத்த பதில்..
நடிகர் சந்தானம்
கோலிவுட்டில் டாப் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சியில் முக்கிய ரோலில் நடித்து வந்த சந்தானம் வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்று நடித்தார். அதன்பின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து ஹீரோவாகவும் நடித்தார்.
தற்போது முழு நேர ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், தன்னுடைய நண்பரும் மறைந்த நடிகருமான சேதுவின் மனைவி புதிய தோழில் ஒன்றை தொடங்கிய நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்து சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது, செய்தியாளர் ஒருவர் ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
அதற்கு சந்தானம், எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய என்று காமெடியாக சிரித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
😎 Jailer 2-ல் சந்தானமா ..? #santhanam #santhanamspeech #jailer2 #rajinikanth #simbu #rajesh #reviv #tamilcinema #latestupdates #cineulagam pic.twitter.com/M7puToUaLe
— Cineulagam (@cineulagam) December 11, 2025