ஓவர் பில்டப் மோசமான ரிவ்யூ! கடுப்பேற்றி ஏமாத்திவிட்ட விக்ரம்..
Vikram
Srinidhi Shetty
Cobra
By Edward
தமிழ் சினிமாவில் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் முக்கிய பங்கினை வகித்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். சேது, பிதாமகன், ஐ, அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் விக்ரம் நடிப்பின் மீது எவ்வளவு அதிக ஈடுபாடும் அன்பும் வைத்திருக்கிறார் என்று தெரியும்.
அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது. இந்நிலையில் அவர் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் இன்று வெளியாகியுள்ளது.
படம் வெளியாகி படுமோசமான விமர்சனங்களையும் ரசிகர்களின் கருத்துக்களையும் பெற்று வருகிறது. மூன்று வருடங்களுக்கு பிறகு சியான் விக்ரமின் படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இரண்டாம் பாதியில் சொதப்பியுள்ளது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.