தொடர்ந்து காப்பி சர்ச்சையில் லோகேஷ் கனகராஜ்!..அட்லீயை மிஞ்சிடுவார் போலயே
தமிழ் சினிமாவின் இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அமர் என்ற கதாபாத்திரத்தில் விசாரணைக்காக ஒரு இடத்திற்கு செல்வார்கள். இந்த படத்தில் இருக்கும் காட்சிகளும்.
புரூஸ் லீ நடிப்பில் வெளிவந்த enter the dragon என்ற படத்தின் காட்சியும் ஒரே மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு விக்ரம் படத்தின் கதையும் கடந்த 2015ஆம் ஆண்டு Better Call Saul எனும் ஆங்கில வெப் தொடரிலும் கதைக்களம் ஒரே போல் இருக்கிறது என்று சிலர் கூறி வந்தனர். தற்போது மற்ற படங்களை காப்பி அடித்து இயக்கி வரும் அட்லீயை லோகேஷ் கனகராஜ் மிஞ்சுருவார் போலயே என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
Oh my Loki ??? pic.twitter.com/3uzVwIXdpy
— Prasanna (@tweetngrose) July 24, 2023