குடும்பங்கள் கொண்டாடும் படமா? அஜித்தை ட்ரோல் செய்த ஆடை பட இயக்குனர்

Ajith Kumar Vikram Movie
By Edward Jun 03, 2022 08:10 AM GMT
Report

தமிழில் பெஞ்ச் டாக்கீஸ், மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ரத்ன குமார். நடிகை அமலா பாலை வைத்து ஆடையில்லாம் பாதி படத்தினை எடுத்து சர்ச்சையில் சிக்கினார். ஆனால் படம் கதையம்சத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படங்களுக்கு பிறகு இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கதை ஆசிரியராக இருந்து ஸ்க்ரிப் எழுதி கொடுத்துள்ளார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படத்திற்கும் இவர் தான் கதையாசிரியராக பணியாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் ரத்ன குமார் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், லோகி சம்பவம், குடும்பங்கள் கொண்டாடும் படம் என்ற பைல் பாக்ஸினை பதிவிட்டுள்ளார்.

இதனை வைத்து அவர் சிவா - அஜித்தின் படங்களை மறைமுகமாக விமர்சித்துள்ளாரா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனை பார்த்து நெட்டிசன்களுக்கு தங்கள் கருத்துக்களை கூறி ரத்ன குமாரின் பதிவினை கிண்டல் செய்து வருகிறார்கள்.