அடுத்தடுத்த 3 படங்கள்! மார்க்கெட்டை பிடிக்க போராடும் சியான் விக்ரமின் நிலை!

vikram copra chiyaan60 ponniyinselvan
By Edward Jun 25, 2021 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆரம்பக்கட்ட அறிமுகவாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்து ஜாம்பவான் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விகரம். சமீபத்தில் ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளிவர உள்ளதாம். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் ஆக்ஷன், திரில்லர் கலந்த படமாக உருவாகி உள்ளது கோப்ரா. இந்த படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் காணப்படுகிறார்.

கொரோனாவின் ஊரடங்கு சமயம் என்பதால் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் தாமதமாகிவிட்டது. கோப்ரா படத்தில் அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் தாமதம் ஏற்பட்டாலும் சியான் 60 அதற்கு முன்னதாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சரிந்த மார்க்கெட்டை உயர்த்த கோப்ரா, சியான் 60 மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களை மலைபோல் நம்பி உள்ளாராம். ஏற்கனவே தனது மகனின் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால் தான் விக்ரமுக்கு படங்கள் சரியாக ஓடவில்லை என்று கூறப்படுகிறது.