சூர்யாக்கு இருக்கும் பெருந்தன்மை விக்ரம்-க்கு இல்லாமால் போச்சா..ரசிகர்கள் கேள்வி
Suriya
Vikram
Bala
By Tony
சூர்யா, விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள். இவர்கள் இருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமானவர் என்றால் பாலா தான்.
இவர் தான் இந்த 2 பேருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் திருப்புமுனை படங்களை கொடுத்தார். விக்ரம் சினிமாவில் மிகவும் போராட்டத்தில் இருக்கும் போது சேது தான் அவருக்கு பெரும் திருப்புமுனை படமாக இருந்தது.
சேது வந்து 25 வருடம் ஆகிய நிலையில் நேற்று அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டது. அதில் சூர்யா கலந்துக்கொண்டார்.
ஆனால் விக்ரம் வரவில்லையே என்பது எல்லோருக்கும் பெரும் வருத்தம் தான், என்ன தான் மனஸ்தாபம் இருந்தாலும் பாலாவிற்காக வந்திருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.