கமலையும் விட்டு வைக்காத அனிரூத்! ஆண்டவரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் விக்ரம். மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் இப்படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு கமல் படத்தின் பிரமோஷனுக்காக அங்கும் இங்குமாக சென்று வருகிறார்.
வரும் மே 15 ஆம் தேதி விக்ரம் படத்தில் டிரைலர் வெளியாகவுள்ள நிலையில் அனிரூத் இசையில் படத்தின் பத்தல பத்தல பாடல் நேற்று யூடியூப்பில் வெளியானது.
பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் இணையத்தில் நெட்டிசன்கள் எதாவது தவறை கண்டு பிடித்து வைரலாக்குவது சகஜம்.
அப்படி படத்தின் பாடல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலைய்யா படமான அகண்டா-வை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
அப்படத்தில் ஜெய் பாலைய்யா என்ற பாடலும், காசு துட்டு மணி பாடலை போன்று விக்ரம் பட பாடல் இருப்பதாக கலாய்த்து வருகிறார்கள்.
விஜய், சிவகார்த்திகேயனை தொடர்ந்து கமல் படத்தையும் இப்படி ஆக்கிட்டியே அனிரூத் என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Exactly felt ? pic.twitter.com/CcieR2fY0t
— Praveen (@pravee_tears) May 11, 2022