30 வருடமாக கண்டுகொள்ளாத சினிமாத்துறை! ஏஜெண்ட் டீனாவாக அங்கீகாரம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியான படம் விக்ரம். ஜூன் 3 ஆம்தேதி ரிலீசாகிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் அனைத்து கதாபாத்திரமும் மக்கள் மத்தியொல் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் ஏஜெண்ட் டீனா. கிட்டத்தட்ட 30 வருடங்களாக கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டருடன் உதவி நடன இயக்குனராக பணியாற்றியும் முன்னணி நடிகர்கள் படங்களில் நடனமாடி வந்தவர் வசந்தி.
இதுவரை யாரும் கண்டுகொள்ளாத அளவிற்கு இருந்த வசந்தி விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா-வாக அறிமுகமாகி மிரள வைத்துள்ளார். மிகமுக்கிய ரோலில் நடித்தபோது முதல் நாள் ஹூட்டிங்கின் போது கமலை பார்த்து ஓடிவிட்டேன்.
அதன்பின் தான் உங்களால் முடியும் என்று கூறினார் லோகேஷ் கனகராஜ். அதன்பின் 16 நாட்கள் நடித்தும் 6 நாட்கள் சண்டைக்காட்சியிலும் நடித்து கொடுத்துள்ளார். யாருக்கும் தெரியாத வசந்தியை நடிகையாக அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜை பலர் பாராட்டியும் வருகிறார்கள்.
