விஜய் தம்பியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஷீலா நீக்கப்பட்டாரா? பழிவாங்க நடத்திய திட்டமா..

vijay serial thalapathy pandianstores vikranth
By Jai Sep 22, 2021 11:28 AM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் சில வாரங்களுக்கு முன் டாப் 10 இடத்தினை பிடித்து நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது சீரியலில் விறுவிறுப்பான காட்சிகல் ஒளிப்பரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தியின் அம்மாவாக நடித்து வந்த லட்சுமியின் கதாபாத்திரம் இறந்ததைப் போல காட்டப்பட்டு, அதில் நடித்து வந்த ஷீலா தூக்கப்பட்டுள்ளார்.

மேலும் டி.ஆர்.பி-க்காக தான் இப்படி செய்திருக்கிறார்கள் என ஒருபுறம் சொன்னாலும், இதற்கு இன்னொரு காரணமும் உண்டாம். அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லட்சுமி அம்மாவாக நடித்து வந்தவர் நடிகை ஷீலா, இவர் பிரபல நடிகர் விக்ராந்தின் அம்மா. பிக் பாஸில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விஜய் டிவி தரப்பில் விக்ராந்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம்.

அதற்கு அவரும் ஓகே சொல்லியிருந்த நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். விஜய் டிவிக்கு போட்டி சேனலாக விளங்கும் ஜீ தமிழுக்கு விக்ராந்த் சென்றதால் தான் ஷீலாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தூக்கக் காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து விக்ரம் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுபற்றி கூறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள்.