கண்ணாடி முன் நிற்க வைத்து என் பொண்டாட்டி கேட்ட அந்த வார்த்தை!! பிரபல நடிகர் சொன்ன பதில்

Rajinikanth Vikranth Aishwarya Rajinikanth
By Edward Feb 05, 2024 03:07 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆர் பி உதயகுமார் இயக்கத்தில் 2005ல் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் விக்ராந்த். இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த விக்ராந்த், தீவிர கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர். கிரிக்கெட்டில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்காமல் வேறுவழியில்லாமல் சினிமாவில் நுழைந்தார். குடும்பத்தினர் திரைத்துரையை சார்ந்தவர்களாக இருந்தாலும், அதிலும் நடிகர் விஜய்யின் தம்பி உறவினராக இருந்தும் சரியான வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

கண்ணாடி முன் நிற்க வைத்து என் பொண்டாட்டி கேட்ட அந்த வார்த்தை!! பிரபல நடிகர் சொன்ன பதில் | Vikranth Opens About How Her Wife Changed His Life

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ள விக்ராந்த், கிரிக்கெட்டில் இருந்து விலகி சினிமாவில் நுழைந்தப்பின், பெரிய கவனம் செலுத்தாமல் மெனக்கிடல் போடாமல் இருந்ததாகவும் தானாக வாய்ப்பு வரட்டும் என்று இருந்ததாகவும் கூறியுள்ளார். 105 கிலோ எடை நெருங்கிய போது வீட்டில் இருப்பவர்களே வெடுக்கென பேசுவார்கள்.

கண்ணாடி முன் நிற்க வைத்து என் பொண்டாட்டி கேட்ட அந்த வார்த்தை!! பிரபல நடிகர் சொன்ன பதில் | Vikranth Opens About How Her Wife Changed His Life

என் மனைவி என்னை கண்ணாடி முன் நிற்கவைத்து இப்படியான ஒருவர் இப்படியொரு உருவத்தையும் கவனமற்ற ஒருவரையும் வைத்து பணம் இருந்திருந்தால் நானே படம் எடுக்க மாட்டேன் என்றும் எப்படி வெளியில் இருப்பவர்கள் உன்னை வைத்து படம் எடுப்பார்கள் என்று என்னை பேசியதாக விக்ராந்த் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் பேசியது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதால் உழைத்தாக வேண்டும் என்று பல முயற்சிகளை போட ஆரம்பித்ததாக கூறியிருக்கிறார் விக்ராந்த். என் மனைவி கடுமையாக அப்படி என்னை பேசியதால் தான் இந்த நிலைமைக்கு கொண்டு செல்ல அவர் காரணமாக இருந்ததாகவும் விக்ராந்த் எமோஷ்னலாக கூறியிருக்கிறார்.