ஆஸ்காருக்கே ஆஸ்காரா? மட்டம் தட்டிய இளையராஜவை புகழ்ந்த பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து இசைஞானியாக திகழ்ந்து வருபவர் இளையராஜா.
சமீபத்தில் இளையராஜாவின் ஆட்டத்தை முடக்கிய இரு இசையமைப்பாளர்களான ஏ ஆர் ரகுமான் மற்றும் எம் எம் கீரவாணி இருவரும் ஆஸ்கர் விருதினை பெற்றதை வைத்து விமர்சனம் செய்து வந்தனர்.
அதற்கு பலர் இளையராஜாவை கடுமையாக விமர்சித்தும் கேலி கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் விமல் ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். இளையராஜா ஆஸ்கர் விருது வாங்கித்தான் அவருடைய திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர் தமிழ் சினிமாவிற்கு ஒரு ஆஸ்கர் தான் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் ஆஸ்கருக்கே ஆஸ்கரா என்று கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
"இளையராஜாவே நமக்கு கிடைச்ச ஆஸ்கர் அவார்ட் தான்" - நடிகர் விமல் https://t.co/wupaoCz9iu | #ilaiyaraja #Vimal #Cinema #Oscar pic.twitter.com/DLOEzcNGbH
— ABP Nadu (@abpnadu) March 16, 2023