பச்சையாக பொய் சொல்றான்!! கேவலமாக பேசிய நிக்ஷனுக்கு பதிலடி கொடுத்த நடிகை வினுஷா..
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட அடுத்த நாள் நடிகை வினுஷா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு அனுப்பட்டார்.
வெளியில் சென்ற வினுஷா பல விசயங்களை பகிர்ந்து வந்த நிலையில், தன்னை உடல் ரீதியாக கேவலமாக பேசிய நிக்ஷன் பற்றி போட்டியாளர்களிடையே பிக்பாஸ் போட்டுடைத்தார்.
ஆனால் நிக்ஷன், தவறான அர்த்தத்தில் நான் பேசவில்லை எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் விசித்ரா, அர்ச்சனாவு இதை ஏற்காவிட்டாலும் வினுஷாவுக்கு தெரியும் என்று சப்பைக்கட்டு கட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வினுஷா இணையத்தில் பதிவு ஒன்றினை பகிந்துள்ளார்.
அதில் நிக்ஷன் என்னை உருவகேலி பேசியது பற்றி எனக்காக அவர் பேசியாக வேண்டும். தம்பின்னு நினைத்து ஆரம்பத்தில் நல்ல கனெக்ஷனில் இருந்தோம், அப்படி இருந்தும் நாமினேட் செய்தேன்.
உருவகேலி செய்ததற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் நிக்சன் சொன்னது பொய். வீட்டிற்கு வந்ததும் தான் அவன் இப்படியெல்லாம் பேசியது தெரிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மன்னிப்பு கேட்டதால் நல்லவனாகிவிட முடியாது. என்னை கேலி செய்தது நிச்சயம் ஜோக் கிடையாது என்று bully கேங்கிற்கு சொல்கிறேன். உரிமைக்குரல் தூக்கிய பெண்ணியவாதிகள் எங்கே போனார்கள், எனக்காக குரல் கொடுத்த விச்சுவுக்கு நன்றி என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் நடிகை வினுஷா.
