சிம்பு படத்தால் உதறித்தள்ளிய வாய்ப்பு! இதுவரை யாரும் பார்த்திராத நடிகை திரிஷாவின் வைரல் புகைப்படம்!

By Edward May 14, 2021 07:34 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்து சினிமாவில் களமிரங்கினார்.

இதையடுத்து மெளனம் பேசியதே, மனசெல்லாம், சாமி, கில்லி, கிரீடம், வின்னைத்தாண்டி வருவாயா போன்ற பல ஹிட் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இதுவரை யாருக்கும் கிடைக்காத அளவிற்கு எல்லா வருடம் ரசிகர்களின் அதுவும் 90கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் அந்த இடத்தினை பிடித்து வந்தார்.

இதன்பிறகு காதல், நிச்சயதார்த்தம் என பல சர்ச்சைகளில் சிக்கி மன அழுத்ததில் இருந்ததால் சினிமா வாய்ப்புகளை தவரவிட்டார். இதையடுத்து 96 படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து வாய்ப்புகள் பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகை திரிஷா ஆடுகளம் படத்தில் முதலில் கமிட்டாகி பின் கால்ஷீட் பிரச்சனையால் விலகியதும், அவருக்கு பதிலாக தனுஷிற்கு நடிகை டாப்சியும் ஒப்பந்தமாக்கி நடிக்கவைத்து ஹிட் கொடுத்ததும் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் படத்தினை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது தனுஷும் திரிஷாவும் ஆரம்பத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது ஆடுகளத்தில் திரிஷாவின் காட்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery