இது வேற வாய்யி..அது நார வாய்யி, கோலி haters-ஐ வெளுத்துவாங்கும் ரசிகர்கள்!

Virat Trolls
By Jeeva Nov 05, 2021 10:30 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் கணவருமான விராட் கோலி தனது 33-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை இணையத்தில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தொடங்கப்பட்டு விளையாடி வருகின்ற T20 உலகக்கோப்பைக்கான ஆட்டங்களில் இதுவரை ஆடிய மேட்ச்களில் சொல்லிக்கொள்ளும் வகையில் கோலி தலைமையிலான இந்திய அணி ஆடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவரது ரசிகர்கள் விராட்டிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். IPL மேட்ச்களையும் தடை செய்ய வேண்டும் என கூறிவந்தனர். மேலும் கோலியின் தலைமையை விமர்சித்தும் தொடர்ந்து பேசிவந்தனர்.

இதற்கிடையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு இதே ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியும் அவரை புகழ்ந்தும் பேசியும் வருகின்றனர். இதனை பார்த்த விராட்டின் உண்மையான ரசிகர் பட்டாளம் அவர்களை சமூக வலைத்தளங்களில் வெளுத்துவாங்கி வருகின்றனர்.