இதை யாரும் செய்யாதீர்கள் ! வைரல் புகைப்படத்தால் கடுப்பான விராட் கோலி..

anushka sharma Virat kohli
By Jeeva Jan 24, 2022 08:30 AM GMT
Report

நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

இதில் விராட் கோலி அரை சதம் அடித்து விளாசினார், அவர் அரைசதம் அடித்தவுடனே, பெவிலியன் உள்ளே இருந்து விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது குழந்தையான வாமிகாவுடன் வெளியே வந்தார்.

இதுவரை வாமிகாவின் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் நேற்று நேரலையில் வாமிகாவை கண்டவுடன் இணையம் மீடியா என செம வைரலானது அவரின் போட்டோஸ்.

இந்நிலையில், தங்களது குழந்தையின் புகைப்படம் வெளியானது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் விராட் கோலி, “நேற்று போட்டி நடைபெற்ற மைதானத்தில் எங்களது குழந்தையின் முகம் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டதை அறிந்தோம்.

கேமரா எங்களது குழந்தையின் பக்கம் இருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. எங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது. ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல, வாமிகாவை புகைப்படம் எடுக்கவோ, எடுத்ததை பொது வெளியில் பகிரவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நன்றி” என தெரிவித்துள்ளனர். 


 

Gallery