விராட் கோலியின் Loop Mood பாடல் என்ன தெரியுமா!!STR கொடுத்த ரியாக்ஷன்..
Silambarasan
Virat Kohli
Royal Challengers Bangalore
Pathu Thala
IPL 2025
By Edward
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணி வீரருமான விராட் கோலி தற்போது ஐபிஎல் 2025 போட்டியினை விளையாடி வருகிறார். தற்போது அதிக ரன்கள் அடித்து பிங்க் நிற கேப்பை தக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் பிரமோஷன் பேட்டியொன்றில் உங்களின் லூப் மூட் பாடல் என்ன என்று கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நீ சிங்கம் தான்
அதில், தன்னுடைய போனை எடுத்த நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள நீ சிங்கம் தான் பாடல் தான் என்னுடைய லூப் மூட் பாடல் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி சொன்ன அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நடிகர் சிம்பு இதை பார்த்துள்ளார். அதற்கு சிம்பு டிவிட்டர் பக்கத்தில் நீ சிங்கம் தான் விராட் கோலி என்று ஹார்ட்டின் விட்டுள்ளார்.
Nee singam dhan @imVkohli ❤️🔥🦁 https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025