இத்தனை கோடிக்கு விராட் கோலி சொந்தக்காரா? வியக்க வைக்கும் சொத்து விவரம்!
Virat Kohli
By Dhiviyarajan
கிரிக்கெட்டில் முன்னணி வீரராக இருந்து வருபவர் விராட் கோலி. இவர் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விராட் கோலி முதல் நிலை வீரருக்கான சம்பளம் வாங்குகிறார். அது மட்டுமில்லாமல் பல்வேறு நிறுவன விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவரின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. அதில் விராட் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடும் ஒரு புகைப்படத்திற்கு ரூ. 8.9 கோடி கிடைக்கிறது. மேலும் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிற்கு ரூ. 2.5 கோடி கிடைக்கிறது.
விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய். 1050 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகத்திலேயே அதிக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் டாப் இடத்தில் இருக்கிறார்.