சரத்குமார் அங்கப்பிரதட்சணம் பண்ணது எல்லாம் வீணா போச்சே.. விருதுநகர் தொகுதியில் ராதிகாவின் நிலை என்ன?
Sarathkumar
Radhika Sarathkumar
R. Sarathkumar
Lok Sabha Election 2024
By Dhiviyarajan
18வது மக்களவைத் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
தமிழ் நாட்டில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயபிரபாகரனும், திமுக சார்பில் மாணிக்கம் தாகூரும். பாஜக சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் தேமுதிக விஜய பிரபாகரன் முன்னிலை வைக்கிறார். ராதிகா சரத்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நேற்று மனைவியின் தேர்தல் வெற்றிக்காக சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்தது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இந்த சூழல் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் பண்ணது எல்லாம் வீணா போச்சே என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
