என்னை ஏன் டார்க்கெட் செய்கிறார்கள்..நடிகை கயாடு லோஹர் எமோஷனல்..

Gossip Today Tamil Actress Actress Dragon Kayadu Lohar
By Edward Nov 18, 2025 10:30 AM GMT
Report

கயாடு லோஹர்

தமிழில் இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கிறார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

என்னை ஏன் டார்க்கெட் செய்கிறார்கள்..நடிகை கயாடு லோஹர் எமோஷனல்.. | Why Am I Being Targeted Actress Kayadu Lohar Talk

டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் கயாடு லோஹர், இரவுநேர பார்ட்டிக்கு வருவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாக இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.

இதுகுறித்து கயாடு லோஹர் மன உடைந்து பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில், தன்னைப்பற்றி வெளியாகி வதந்திகள் பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார்.

என்னை ஏன் டார்க்கெட் செய்கிறார்கள்..நடிகை கயாடு லோஹர் எமோஷனல்.. | Why Am I Being Targeted Actress Kayadu Lohar Talk

என்னை ஏன் டார்க்கெட் செய்கிறார்கள்

அதில், சோசியல் மீடியாக்களில் என்னைப்பற்றி பரவும் அவதூறு கருத்துக்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான். பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஆழ் மனதில் அது உறுத்திக்கொண்டே இருக்கும்.

எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் என்னை ஏன் டார்க்கெட் செய்கிறார்கள்? என்று கண்ணீர்விட்டு எமோஷனலாக பேசியிருக்கிறார் கஹாடு லோஹர்.